13 Jul 2016

மன்னாரில் 10 குழாய் நீர் கிணறுகள் அமைக்க ஹிஸ்புல்லாஹ் நிதி உதவி

SHARE
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் முன்னெடுத்து வரும் குழாய் நீர் கிணறுத் திட்டத்தின்
மற்றுமொரு நற்பணி மன்னாரில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கான நிதியினை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ் புதன் கிழமை (13) வழங்கி வைத்தார்

மௌலவி அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.முபாரக் (ரஷாதி) அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய 6 இலட்சம் ரூபா நிதி இத்திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
மன்னார் மாவட்டத்தில் உள்ள அடம்பன், பள்ளிவாசல்பிட்டி போன்ற பகுதிகளில் வாழும் குழாய் நீர் கிணறு தேவையுள்ள 10 குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடையவுள்ளனர்.  
இதற்கான நிதியினை மௌலவி அஷ்ஷெய்க்; எஸ்.எச்.எம். முபாரக்கிடம் ஹிரா பௌண்டேஷன் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று புதன்கிழமை இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைத்தார். இந்நிகழ்வில், மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்று அதிகாரி பொறியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பிரத்தியோக செயலாளர் றயிஸ{ட்டீன், இணைப்புச் செயலாளர் றுஸ்வின் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ், நாட்டின் பல பாகங்களில் குடி நீர் பிரச்சினை நிலவுகின்றன. இவற்றுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் நடவடிக்கை எடுத்துள்ளது. அநுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ். மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இதற்கான திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம். தற்போது மன்னார் மாவட்டத்தில் நிலவுகின்ற குடிநீர் பிரச்சினை தொடர்பில் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதற்கமைய ஒரு கிணறு அமைக்க 60 ஆயிரம் வீதம் 10 கிணறுகள் அமைக்க 6 இலட்சம் ரூபா நிதி ஓதுக்கப்பட்டுள்ளது. என்றார்.

நிதியினை மௌலவி அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். முபாரக் (ரஷாதி) கருத்துத் தெரிவிக்கையில்,

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் சேவையை நாங்கள் பாராட்டுகின்றோம். அவரது சேவை தொடர வேண்டும். அவசர வேண்டுகோளுக்கு அமையவே அவர் இந்நிதியை எமக்கு வழங்கினார். தொடர்ந்தும் எம்முடன் இணைந்து செயலாற்றுவதாக வாக்குறுதியும் வழங்கியுள்ளார். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி அவர் மேற்கொள்ளும் இந்த முயற்சிகள் சிறந்த பயனை வழங்க வேண்டும் என்றார்




SHARE

Author: verified_user

0 Comments: