17 Jun 2016

கலை கலாசார பாரம்பரிய கலைகள் வளர்க்கப்பட வேண்டும். கல்முனை பிரதேச செயலாளர்

SHARE
(டிலா )

கலை கலாசார பாரம்பரிய கலைகள் வளர்க்கப்பட வேண்டும். என கல்முனை பிரதே செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி தெரிவித்தார்.
கல்முனை பிரதே செயலகத்தின் கலைஞர் அதிகாரசபை ஏற்பாடு செய்த கலைஞர்களுடனான சந்திப்பும் இப்தார் நிகழ்வும் அதிகாரசபையின் தலைவர் பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி தலைமையில் (16) மருதமுனை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே பிரதேச செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

அன்று கலை கலாசாரத்துக்கு பங்களிப்பு செய்தவர்கள்தான் இன்றும் இந்தத் துறையை வளர்ப்பவர்களாக இருக்கிறார்கள். இளையோர் மத்தியில் இந்த கலைத்துறையை கொண்டுசெல்ல வேண்டும். எமது கலாசாரத்தை பிதிபலிக்கக்கூடிய பாரம்பரிய கலைகள் இன்று அழிந்து வருகின்ற சூழலைக் காணுகின்றோம். இந்த நிலை மாற வேண்டும். உயிரோட்டத்துடன் எமது கலை கலாசார கலைகள் வளர்க்கப்பட வேண்டும்.

இங்கு பல துறைகளுக்கும் பங்களிப்புச் செய்கின்ற கலைஞர்கள் வந்திருக்கின்றீங்கள். எதிர்காலத்தில் இந்த அதிகார சபை ஊடாக எமது கலை கலாசார அம்சங்களை பாதுகாக்க மற்றும் அதனை வளர்க்க நீங்கள் எல்லோரும் ஒருமித்து முன்வர வேண்டும். எனவும் தெரிவித்தார். -அதிகார சபையின் செயலாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான எஸ்.எல். ஜலால்தீன்,ஓய்வுநிலை அதிபர் ஏ.எம்.ஏ.சமது, திவிநெகும தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.ஏ.சாலிஹ், ஓய்வு பெற்ற கல்வித் கல்லூரி பீடாதிபதி எம்.ஏ.ஜெலீல் உட்பட பிரதேச கலைஞர்களும் கலந்து கொண்டனர். இப்தார் விஷேட மார்க்க சொற்பொழிவை மெளலவி. றஸ்மி மூஸா நிகழ்த்தினார்.















SHARE

Author: verified_user

0 Comments: