22 Jun 2016

ஏறாவூர் வாவிக்கரை அழகுபடுத்தலுக்கு 40 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு

SHARE
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் அவர்களின்  நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூர் வாவிக்கரை அழகுபடுத்தல் திட்டத்துக்காக 40 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சரின் இணைப்பாளர் ஏ. அப்துல் நாஸர் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர பிரதேசத்தின் தென் புறத்தே அமைந்துள்ள ஏறாவூர் வாவிக்கரைப் பிரதேசம் உள்ளுர் நகர தமிழ் முஸ்லிம் மக்களினதும் மற்றும் சுற்றுலா வரும் சிங்களவர்கள் உட்பட அனைத்து இன மக்களினதும் பொழுது போக்கிடமாக இருப்பதால் அதனை அழகுபடுத்த வேண்டிய தேவை கருதி முதலமைச்சர் இதற்கு முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வாவிக்கரை பொழுது போக்கிடத்தின் சுமார் 80 இலட்ச ரூபாய் செலவிலான கட்டிட நிர்மாணப் பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ள நிலையில் மேலும் 40 இலட்ச ரூபாய் செலவில் வாவிக்கரையோரத்தை அழகுபடுத்தலுக்கான ஏனைய பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் (2016-ஓகஸ்ட்) மாதம் அளவில் நிறைவு பெறும் என அப்துல் நாஸர் தெரிவித்தார்.

பொது மக்களின் பாவனைக்கு வாவி அழகுபடுத்தல் மற்றும் வாவிக்கரை பொழுபோக்கிடம் (டுயபழழn ளனைந நவெநசவயinஅநவெ) என்பன திறந்து வைக்கப்படும்போது ஏறாவூர் நகர சபையின் பராமரிப்பில் பொறுப்பேற்;கப்படும் என ஏறாவூர் நகர சபைச் செயலாளர் எச்.எம்.எம். ஹமீம் தெரிவித்தார். 




SHARE

Author: verified_user

0 Comments: