7 Jun 2016

பூப்பந்து போட்டிகளில் மாகாண மட்டத்தில் 3ஆம் இடத்தைப் பெற்ற அல் ஹிரா வித்தியாலயத்துக்கு ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து

SHARE
மாகாண மட்ட பூப்பந்து (badminton) போட்டிகளில் மூன்றாம் இடத்தைப் பெற்ற காத்தான்குடி அல் ஹிரா வித்தியாலயத்துக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்

பாடசாலை அதிபர் ஹக்கீம் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துக் கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

பூப்பந்து போட்டிகளில் கிழக்கு மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ள அல் ஹிரா வித்தியாலயத்துக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 15 வயதின் கீழ் இடம்பெற்ற இப்போட்டியில் கலந்து கொண்ட .எஸ்.எம்.அப்பாஸ், எம்..எம்.அப்துல்லாஹ், எம்.ஆர்.எம்.பர்ஹாஜ், எம்.எச்.எம். மஸ்ஹான் மற்றும் இம்மாணவர்களை சிறப்பான முறையில் தயார்படுத்தி இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த பயிற்றுவிப்பாளர் எம்.ஆர்.. கியாஸ் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்களையும் - பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்

அத்துடன், அல் ஹிரா வித்தியாலயத்தின் வளர்ச்சிப் பாதையில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு என்பன பெரும் பங்காற்றி வருகின்றன. இவர்களது முயற்சிக்கு கிடைத்த பெரும் வெற்றியாக இது அமைந்துள்ளதுஎன அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளார்

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில் அல் ஹிரா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானம் அண்மையில் புணரமைக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.  


SHARE

Author: verified_user

0 Comments: