(க.விஜி)
துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலயத்தில் கடந்த 50 வருட காலங்களில் வண்ணக்கராக, செயலாளராக, பொ
ருளாளராக இருந்து துறைநீலாவணையில் சமயப்பணி மேற்கொண்டவர்களை “வாழும்போது வாழ்த்துவோம்” எனும் கௌரவிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் பி.ப. 9.00 மணியளவில் வண்ணக்கர் கி.விஜயகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ. யோகேஸ்வரன், ஞா. சிறிநேசன் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம் ஆகியோர்களும் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மாகாண சபை உறுப்பினர்களான, த. கலையரசன், கோவிந்தம் கருணாகரம், ஞா. கிருஸ்னபிள்ளை, மா, நடராஜா ஆகியோர்களும் விசேட அதிதிகளாக பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி. நகுலேஸ்வரி புள்ளநாயகம், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர், கலாநிதி கோபாலரெத்தினம், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சனத் நந்தலால் ஆகியோர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது கடந்த காலங்களில் ஆலயத்திற்கு பதவி வழியில் சமயப் பணியாற்றிய சுமார் 40 பேருக்கு ஞாபகார்த்த சின்னம், பாராட்டுப் பத்திரம், வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்கள்
0 Comments:
Post a Comment