நல்லாட்சி அரசிலும் பல பிரச்சனைக்ள இருக்கின்றன பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களாக மக்களால் தூக்கிய எறியப்பட்டு நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தலைவர் பதவி வழங்கப் பட்டுள்ளது. இது கட்சியை வழர்ப்பதற்காகவா இப்பதவி வழங்கப் பட்டுள்ளது என சந்தேகம் எழுந்துள்ளது.
இது ஒரு வேதனையான விடையமாகும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் மக்கள் சேவைகளுக்குத் தடை ஏற்படுத்துவதற்காகவா இவ்வாறான பதவிகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் சந்தேகம் எழுந்தள்ளது.
இவ்வாறு மக்களால் நிராகரிக்கப்டப்டவர்கள் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டங்களுக்குத் தலைமை தாங்க வருவார்களோயானால் அவ்வாறான அக்கூட்டங்களுக்கு எம்னைச் செல்ல வேண்டாம் என என்னைத் தெரிவு செய்த மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே எமது மக்களின் கோரிக்கைகளுக்கிணங்க மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்கள் பிரதேச அபிவிருத்திக் கூழுக் கூட்டங்களுககுத் தலைமை தாங்குவார்களேயானால் அக்கூட்டங்களுக்கு நான் செல்லமாட்டேன். என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளர்.
மட்டக்களப்பு கோட்டைக் கல்லாற்றில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (21) நண்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…..
நாங்கள் தெரிவு செய்த அரசாங்கம் தற்போது எமது பிரதிநிதிகளைக் கருத்தில் கொள்ளாமல் மக்களால் நிராகரிக்கப் பட்டவர்களுக்கு பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி வழங்கியுள்ளது. என எமது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே மக்கள் பிரதிநிதியாகிய உங்களுக்கு அக்கூட்டத்தில் அங்கீகாரம் இல்லாவிட்டால் அக்கூட்டத்தில் முன்மொழியப்படுகின்ற அபிவிருத்தி எமக்குத் தேவையில்லை என எமது மக்கள் எனக்குக் கட்ளையிடுகின்றனர். எனவே நான் எமது மக்களின் கருத்துக்களுக்குத் தலை வணங்குகின்றேன்.
தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தில் எமது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களும் பாதிக்கப் பட்டுள்ளதோடு, அதிக விவசாயிகள், செங்கல் உற்பத்தியாளர்கள் என பலரும், பாதிக்கப் பட்டுள்ளார்கள்.
எனவே உடனடியாக கிழக்குமாகாண அமைச்சரவை, மாவட்ட அரச நிருவாகத்தினர் அனவரும், ஒருமித்து செயற்பட்டு பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்ப துரிதகதியில் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment