6 May 2016

கஞ்சாவுடன் மூவர் கைது

SHARE
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலி;ஸ் பிரிவிலுள்ள மிச்நகர்  மற்றும் மக்காமடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை வெள்ளிக்கிழமை 06.06.2015 கஞ்சாவுடன் கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஸ்தலத்துக்குச் சென்று சோதனைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்ததோடு அவர்கள் வசம் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.

மிச்நகர் கிராமத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞனிடமிருந்து 5 கிராம் 100 மில்லிகிராம் கஞ்சாவும், மக்காமடி வீதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞனிடமிருந்து 4 கிராம் 200 மில்லி கிராம் கஞ்சாவும், மேலும் மக்காமடி வீதியைச் சேர்ந்த 21 வயதான மற்றொரு இளைஞனிடமிருந்து 5 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் தாம் இது பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினர்.

இதேவேளை கஞ்சா மற்றும் போதைப் பொருள் பாவினை மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்களிடமிருந்து ஒத்துழைப்பான விதத்தில் தமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுவருவதாக ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும்  சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: