24 May 2016

நீர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

SHARE
அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீரினை வழங்கி ஆரோக்கியமான சமூதாயத்தினை கட்டியெழுப்பும் நோக்கில் தேசியநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புசபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் அலுவலகம் மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அதன் பயனாளிகளுக்கு நடாத்திவருகின்றது. 

அதன் அடிப்படையில் மக்களோடு இணைந்து பணியாற்றுகின்ற அரச வெளிக்கள உத்தியோகத்தர்களான, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பொதுசுகாதாரத் துறையைச்சார்ந்த உத்தியோகத்தர்கள்,  ஆகியோர்களையும் உள்வாங்கிய மேற்படி விழிப்புணர்வு நிகழ்ச்சி காத்தான்குடி பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில்  இன்று செவ்வாய் கிழமை (24) காலை 09.45 மணிமுதல் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துறைசார்ந்த வளவாளர்களால் நீர் பாதுகாப்பு தொடர்பான விளக்கங்கள் முன்வைக்கப்படவுள்ளதோடு தேசியநீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் பொறியியளாலர் டி.எ.பிரகாஷ், பிரதேசசெயலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள், யூனிசெப், பிளான்  ஸ்ரீ லங்கா, ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உட்பட பலர் பிரதிநிதிகளும் கலந்து கலந்து கொள்ளவுள்ளதாக சமூக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் அலுவலகம் மாவட்ட சமூகவியலாளர் எம்.எஸ்.எம்.சறுக் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: