24 May 2016

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் உதவி வழங்கும் அமெரிக்கா

SHARE
இலங்கையில் வெள்ள நிவாரண முயற்சிகளுக்கு உதவும் வகையில் கூடுதலாக
ரூ. 36 மில்லியன்களை (250,000 அமெரிக்க டொலர்கள்) அமெரிக்க அரசாங்கம் வழங்குவதாக அமெரிக்கத் தூதரகம் ஞாயிற்றுக் கிழமை (22) வெளியிட்டுள்ள ஊடக அறிவிக்கப் பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது… 
முன்னர் அறிவிக்கப்பட்ட கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதநேய உதவி நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலான ரூ. 7.2 மில்லியன் (50,000 அமெரிக்க டொலர்கள்) மற்றும் வெள்ளப் பெருக்கிலும், வரட்சியிலும் அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய ஆபத்துக் கொண்ட மக்கள் தொகைக்கு பாதுகாப்பான, அனர்த்த-நெகிழ்வான, குடிநீர் வழங்குவதற்கு வடிவமைக்கப்பட்ட அண்ணளவாக ரூ. 144 மில்லியன் (1 மில்லியன் அமெரிக்க
டொலர்கள்) பெறுமதியான மூன்று வருட நிகழ்ச்சி என்பவற்றுக்கு மேலதிகமாக இந்த உதவி அமைகின்றது.

இதன் அடிப்படையில் அமெரிக்க அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட உடனடி மற்றும் வரைகால நிவாரணம் அண்ணளவாக ரூ. 187 மில்லியன்களாகும் (1.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள்). மேம்படுத்தப்பட்ட மனிதநேய தகவல் முகாமைத்துவம் மற்றும் ஒத்துழைப்பிற்கு, ஐக்கிய நாடுகள் மற்றும் இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக அரசாங்கத்தின் அனர்த்த
முகாமைத்துவ முறைமையினை மேம்படுத்துவதற்கு, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து நீண்ட கால உதவி மற்றும் இயலுமையை கட்டியெழுப்பலை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் தமது முயற்சிகளை தொடர்ந்து வருகின்றது.


வெள்ள சூழ்நிலையை கண்காணித்து வரும் அமெரிக்கத் தூதரகம், மேலதிக தேவைகளை கண்டறிவதற்கு இலங்கை அரசாங்க நிவாரண அதிகார சபைகளுடன் தொடர்ந்து நெருக்கமாக செயற்பட்டு வருகின்றது. என அதில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: