
(டிலா)
மருதமுனையை சேர்ந்த பத்திரிகையாளர் பி.எம்.எம்.ஏ. காதர் இன் 28 வருடகால சேவையை பாராட்டி மருதமுனை புதுப்புனைவு இலக்கியவட்டம் ஏற்பாடு செய்துள்ள பாராட்டு விழா நாளை (28.05.2016) மருதமுனை பொதுநூலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கவிஞர் மருதமுனை ஹஸன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எம்.றியாஸ் அஹமட் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
0 Comments:
Post a Comment