மட்டக்களப்பு மாவட்டம் துறைநீலாவனையிலிருந்து துரைவந்தியமேடு மற்றும் சவளக்கடைக்கடை, ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பிரதான பாதை அண்மையில் பெய்த மழைவெள்ளத்தினால் உடைப்பெடுத்துள்ளது.
இதனால் அப்பகுதியினைச் சூழவுள்ள சுமார் 800,900 ஏக்கர் அறுவடைக்குத் தயாரகவிருந்த வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்விடத்திற்குச் இன்று செவ்வாய் கிழமை மாலை (17) நேரில் சென்ற கிழக்கு மாகாண விவசாய அமைச்சர், மற்றும், கிழக்கு மாகாண உபை உறுப்பினர் மா.நடராசா ஆகியோர் நிலமையினை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடமும் கலந்துரையாடியுள்ளனர்.
0 Comments:
Post a Comment