(க.விஜி)
மத்திய முகாம் றாணமடு இந்து மகாவித்தியாலய மாணவி தமிழ் இலக்கணப்போட்டியில் முதலாம் இடத்தைப்பெற்று தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளதாக மத்திய முகாம் றாணமடு இந்து மகாவித்தியாலய அதிபர் எஸ்.தியாகராசா தெரிவித்தார்.
அண்மையில் தமிழ்இலக்கணப்போட்டி கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் நடைபெற்றபோதே றாணமடு இந்து மகாவித்தியாலய மாணவி போட்டியில் பங்குபற்றினார். 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் அற்புதராசா மிராளினி எனும் மாணவியே மாகாணமட்டப் போட்டியில் இவ்வாறு தெரிவாகி தேசியமட்ட போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் பாடசாலையில் இணைப்பாடவிதானப் செயற்பாடுகளில் முதன்மையான மாணவியும்,அதிபர், ஆசிரியர்களை அன்பாக நேசிக்கும் முதன்மையான மாணவியாவார். இவர் பாடசாலைக்கும், சம்மாந்துறை வலயத்திற்கும் போட்டியில் பங்குபற்றி பெருமை சேர்த்துள்ளார். இவரைப்போன்ற பலமாணவர்களை உருவாக்குவதே பாடசாலையின் இலக்காக இருக்கின்றது. இந்த அர்ப்பணிப்பான செயற்பாட்டுக்கு பாடசாலை நிருவாகம்,பெற்றோர் சமூகம் உழைத்துக் கொண்டிருக்கின்றது என அதிபர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment