22 May 2016

வாகரை புணாணை விநாயகர் ஆலயம் பாழடைந்த நிலையில்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணை ஜெயந்தியாய கொழும்பு பிரதான வீதியிலுள்ள விநாயகர் ஆலயம் பாழடைந்த நிலையில் விக்கிரகமின்றி காணப்படுகின்றது.
இவ்வாலயமானது கொழும்பு பிரதான வீதியால் செல்லும் பயணிகள் தங்குடைய பயணம் எவ்வித தங்கு தடைகளுமின்றி அமைய வேண்டும் என வேண்டி இவ்வாலயத்தில் தங்குடைய வேண்டுதலை வேண்டி செல்வது வழங்கம்.

ஆனால் தற்போது இவ்வாலயமானது எதுவித பராமரிப்பும் இன்றி ஆலயத்திற்குள் உள்ள விக்கிரம் இல்லாமல் பாழடைந்த நிலையில் காணப்படுவதால் பயணிகள் வணங்கிச் செல்வதற்காக எவ்வித ஆலயங்களும் இவ்விடத்தில் இல்லை.

இவ்வாலயமானது இலுக்குப்புல் தோட்டத் தொழிலாளர்களால் 1960 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு பூசை வழிபாடுகள் செய்யப்பட்டு வந்தது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் புனரமைப்பும் செய்யப்பட்டது. ஆனால் இவ்வாலயம் தற்போது பராமரிப்பற்று கிடக்கின்றது.

இவ்வாலயத்தை உடனடியாக புனரமைப்பு செய்து விநாயகர் விக்கிரம் வைத்து ஆலயத்தை இவ்வீதியால் செல்லும் மக்கள் தங்குடைய வேண்டுதலை வேண்டி செல்வதற்கு வழியமைத்துக் கொடுக்குமாறு வாகரை பிரதேச செயலாளரை ரமணமகரிஷி நற்பணி மன்ற கிளைத் தலைவர் எஸ்.செல்லத்துரை கேட்டுக் கொண்டுள்ளார்.

இப்பாதையால் பல அரசியல் வாதிகள் நாடாளுமன்றம் மற்றும் ஏனைய இடங்களுக்கு செல்லும் போது பார்வையிட்டு செல்கின்றார்களே தவிர இதனை புனரமைத்து இந்து மக்கள் வழிபட்டு செல்வதற்கு யாரும் உதவி செய்யவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் அல்லது இந்து சமய ஆர்வாளர்கள் இவ்வாலயத்தை புனரமைத்து தருமாறு இப்பாதையால் பயணிக்கும் பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.







SHARE

Author: verified_user

0 Comments: