22 May 2016

இயற்கை இடரில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஏறாவூரிலிருந்து சுமார் 25 இலட்சம் பணமும் பொருட்களும். ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட்

SHARE

நாட்டில் தற்போதைய சீரற்ற காலநிலையின் விளைவாக ஏற்பட்டுள்ள இயற்கை இடரினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட நிவாரண சேகரிப்பு வெற்றியளித்துள்ளதாக ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் ஞாயிற்றுக்கிழமை 22.05.2015 தெரிவித்தார்.இதற்கமைய ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்மிய்யத்துல் உலமா சபை மற்றும் சமூக நிறுவனங்களும் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை நிவாரணமாக பணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதன் பயனாக சுமார் 12 இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பணமும் அண்ணளவாக அதே தொகைப் பெறுமதியில் அத்தியாவசியப் பொருள்களும் சேகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கட்டாரில் தொழில் வாய்ப்புப் பெற்றிருக்கும் ஏறாவூர் சகோதரர்களின் அமைப்பு சேகரித்த இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஞாயிற்றுக்கிழமை ஏறாவூர் ஜாமியுல் அக்பர் ஜும்மாப் பள்ளிவாசலில் வைத்து ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் மற்றும் சமூகசேவையாளர் எம்.எஸ்.எம். நஸீர் உட்பட மார்க்கப் பிரதிநிதிகளிடம் நிவாரண நிதியாக ஒப்படைக்கப்பட்டது.


SHARE

Author: verified_user

0 Comments: