19 May 2016

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சேவைகள் சம்பந்தமாக தெளிவூட்டல்

SHARE
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சேவைகள் சம்பந்தமாக ஊடகவியலாளர்களுக்குத் தெளிவூட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என். நைறூஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு ஜனவரி தொடக்கம் மே மாதம் வரை இடம்பெற்ற தேசிய கிராம அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், இளைஞர் சமூக அபிவிருத்திச் செயற்பாடுகள் பற்றியும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இவ்வாண்டுக்குள் நிறைவேற்றப்படவுள்ள வேலைத்திட்டங்கள் பற்றியும் தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை (23.05.2016) காலை 9 மணிதொடக்கம் காலை 11 மணிவரை மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்கள் அனைவரும் பங்குபற்றுவதன் மூலம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் பற்றிய புரிதலைப் பெற்றுக் கொள்ள வழியேற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: