1 May 2016

தும்பங்கேணி கண்ணகி இந்து கலாமன்றத்திற்கு, கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையினால் இசைக் கருவிகள் வழங்கி வைப்பு.

SHARE
கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்திச் சபையினால் மட்டக்களப்பு தும்பங்கேணி கண்ணகி இந்து கலா மன்றத்திறத்திற்கு இசைக் கருவிகள், வாழ்வாதார உதவி, உலர் உணவுப்பொதி, மாணவர்களுக்கான கற்றல் புத்தகங்கள், இந்துமத நன்நெறிக் கோகையான
பகவத்கீதை, மாணவர்களுக்கான மாலை நேர கற்றல் வகுப்பு வசதிகயை ஏற்படுத்தல், இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாழிகாட்டல்  செயற்பாடுகள், என்பன சனிக்கிழமை கிழமை (30) வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கிலங்கை இந்து சமய அபிவிருத்திச் சபையின் தலைலவர் த.துஷ்யந்தன் தலைமையில் மட்.கண்ணகி மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் இரத்த வங்கிப் பிரிவு வைத்தியர் க.விவேக், எருவில் புளியடிப் பிள்ளையார் ஆலயம், தேற்றாத்தீவு வடபத்திரகாளி அம்மன் ஆலயங்களின் பிரதம குரு, சிவ ஸ்ரீ.க.வடிவேல் குருக்கள், தும்பங்கேணி கண்ணகியம்மன் ஆலய பிரதம குரு சிவ.ஸ்ரீ. ஆனந்தன் குருக்கள், மட்.பழுகாமம் விபுலானந்த வித்தியாலய பிரதி அதிபரும், சமாதான நீதவானும், போரதீவுப்பற்று மத்தியஸ்த சபையின் பிரதித் தவிசாளருமான வ.பரமலிங்கம், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ்.விஜயரதாசா, உட்பட கிராம பொதுமக்கள், பாடசாலை மாணரவகள், தும்பங்கேணி இந்து கலா மன்றத்தினர், விளையாட்டுக் கழத்தினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், என பலரும் காலந்து கொண்டனர்.

ஆலயங்களில் குருமார்கள், மக்கள் மத்தியில் இந்து மத அறக் கருத்துக்களை மிகவும் தெளிவான விளக்கங்களுடன் எடுத்தியம்ப வேண்டும், இந்து மத அறக் கருத்துக்கள் மக்கள் மத்தியில் சிறந்து விளங்குமாயின் வீண் பிரச்சனைகள், தொல்லைகள் என்பன ஏற்படாது. என்பதோடு இந்து மத்தின் நன்நெறிக்கோவையான பகவத் கீதையைப் பின் பற்றி நடக்கும் வேளையில் மக்களிடையே அன்பும், கருணையுள்ளமும் மேலோங்கும் என சிவ ஸ்ரீ.க.வடிவேல் குருக்கள்,  இதன்போது தெரிவித்தார். 

இந்து இளைஞர் மன்றங்கள் வெறுமனே பஜனை மன்றங்களாக இல்லாமல் கிராமங்களில், கலை கலாசார மற்றும், ஆய்வு நிலையங்களாக மிளிரும் வேண்டும், பஜனை நிகழ்வுகள் என்பன இக்கிராமத்தில் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும், இதுபோன்ற நிகழ்வுகள் கிராமங்கள் தோறும், நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஷ்யந்தன் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட வைத்தியர் க.விவேக் குறிப்பிடுகையில் காலத்தால் முந்திய இந்து மத்தில் பல நல்ல அறக்கருத்துக்கள் பொதிந்துள்ளன. இந்துமத வழிபாட்டு முறைகளின் செயற்பாடுகளில் சில, விஞ்ஞான ரீதியில் தற்போது மருத்துவத்துறையிலும், சிகிச்சை முறைகளாகவும் பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும், இந்து சமய சொற்பொழிவுகளும். இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
 





























SHARE

Author: verified_user

0 Comments: