12 May 2016

புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக் கழகத்தின் 40 ஆவது அண்டு நிறைவையிட்டு பட்டிமன்றமும் பரிசளிப்பு நிகழ்வும்

SHARE
புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக் கழகத்தின் 40 ஆவது அண்டு நிறைவையிட்டு பட்டிமன்றமும் பரிசளிப்பு நிகழ்வும் கடந்த வெள்ளிக்கிழமை ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில்  கதிரவன் கலைக் கழகத்தின் ஆலோசகர் மா.சதாசிவம் தலைமையில் இடம்பெற்றது.
முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனம் மற்றும் உலக நண்பர்கள் அமைப்பு என்பவற்றின் அனுசரனையுடன் இடம்பெற்ற இந் நிகழ்வில் மண்முனைப் பற்று கல்விக் கோட்டத்தில் கடந்த கல்வி பொதுத்தர சாதாரண பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பரிசு வழங்கிக் கௌரவித்ததுடன் தமிழர் பண்பாடு வாழ்கிறது தமிழர் பண்பாடு வீழ்கிறது என்ற தலைப்பில் கதிரவன் கலைக் கழகத்தின் தலைவர் கதிரவன் த.இன்பராசா தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றமும் இடம்பெற்றது.

இதே வேளை புதுக்குடியிருப்பில் இருந்து சட்டக்கல்லூரிக்கு தெரிவாகி சட்டக்கல்லூரிக்கு செல்லும் மாணவன் செ.யசு என்பவருக்கு கல்வி நடவடிக்கை நிறைவு பெறும்வரை மாதாந்தம் முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் வழங்கப்படவுள்ள உதவித்தொகையினை வழங்கிவைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இதன் போது பட்டிமன்றத்தில் பங்குகொண்டவர்களுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மண்முனைப் பற்றுப் பிரதெச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் கலந்துகொண்டதுடன் சிறப்பு மற்றும் கௌரவ விருந்தினர்களாக மண்முனைப் பற்று பிரதேச சபை செயலாளர் ந.கிருஸ்ணப்பிள்ளை, கோட்டக் கல்வி அதிகாரி திருமதி நேசசவுந்தரி தங்கவடிவேல், கலாசார உத்தியோகஸ்தர் திருமதி வளர்மதி ராஐ;, முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மா.சசிகுமார், பொருளாளர் தயானந்தரவி மற்றும் அதிபர்களான ச.சித்திரவேல், வே.தட்சணாமூர்த்தி, கு.வன்னியசிங்கம், ச.மதிசுதன், கி.தவேந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன் ஊர் பிரமுகர்கள் பெற்றார்கள் கலந்துகொண்டனர். 



































SHARE

Author: verified_user

0 Comments: