6 Apr 2016

கல்லடி விவேகானந்தா மகளிர் மகாவித்தியாலயத்தின் "சரஸ்வதி சிலை திறப்பு

SHARE
(க.விஜி)
கல்லடி விவேகானந்தா மகளிர் மகாவித்தியாலயத்தின் "சரஸ்வதி சிலை திறப்பு விழாவும்,போட்டோ பிரதி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வும்இன்று  ஞாயிற்றுக்கிழமை (3.4.2016) காலை 10.00 மணியளவில் அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு ஆத்மீக அதிதியாக கல்லடி இராமகிருஸ்ணமிஸன் சுவாமி பிரபு  பிரேமானந்தாஜீ அவர்களும்,பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்களும்கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் ,அவுஸ்ரேலியா பொறியியலாளர் சங்க பிரதிநிதி நவசிவாயம் மோகனதாஸ்,கோட்டக்கல்விப்பணிப்பாளர் .சுகுமாரன்பேச்சியம்மன் ஆலய பரிபாலனசபை முகாமையாளர் என்.ஹரிதாஸ்,  ஆகியோர்களும்,சிறப்பு அதிதிகளாக பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ரீ.பிரியதர்சன் பேச்சியம்மன் தலைவர் எஸ்.சந்திரகுமார்,முன்னாள் தலைவர்  ரீ.ஸ்ரீஸ்கந்தராஜா,மற்றும் வீ.மேகநாதன்வீ.ஜனமோகன்,எஸ்.சுபாகரன்,

பிரதி அதிபர்களான திருமதி .கோமளாதேவி கணேசமூர்த்தி,திருமதி நித்தி சிவநாதன்,ஆசிரியர்களான ரீ.குருபரன்,ஜீ.ரவிச்சந்திரன்,நிலக்ஸன்,திருமதி என் சுந்தரமூர்த்தி  மற்றும் பெற்றோர்கள்,மாணவிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்இந்நிகழ்வில் அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டு அதன் பின்பு சம்பிரதாய பூர்வமாக விளக்கேற்றிகற்பூரம் கொழுத்தி சுவாமி பிரபு பிரேமானந்தாஜீ அவர்களின் தெய்வீக நிந்தையுடன் மலர்மாலை சரஸ்வதி சிலைக்கு சாத்தப்பட்டு சிலை மாணவர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.அதன்பின்பு சரஸ்வதி வழிபாடு நிகழ்த்தப்பட்டது.அவுஸ்ரேலியா தமிழ் பொறியியலாளர் சங்கத்தினால் பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றை வலயக்கல்விப்பணிப்பாளர்கோட்டக்கல்விப்பணிப்பாளர்,பாடசாலை அதிபர்ஆசிரியர்களிடம் நவசிவாயம் மோகனதாஸ் கையளித்தார்.பாடசாலையில் சரஸ்வதி சிலையை அமைப்பதற்கு முழுமையான பங்களிப்பு செய்த பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களுக்கு பாராட்டிபொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது.சித்திர பாட ஆசிரியரும் ஓவியருமான ஜீ.ரவிச்சந்திரன் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது.


















SHARE

Author: verified_user

0 Comments: