6 Apr 2016

மூதூரில் இடம்பெற்ற வீதி விபத்தில் காத்தான்குடி வாசி மரணம்.

SHARE
மூதூர் பகுதியில் ஞாயிறு மாலை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதுண்டதில் அந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் மரணமடைந்ததாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.


காத்தான்குடி-02, சரீப் புரக்டர் வீதியைச் சேர்ந்த முஹம்மது சாதிக் (வயது-31) என்பவரே வீதி விபத்தில் மரணித்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது.

தந்தையும் மகனும் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

அந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரில் மகன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே மரணித்துள்ளார்.

மேலும் விபத்தில் படுகாயமடைந்த தந்தை கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளார்
மரணித்த சாதிக் என்பவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: