மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்தத்திற்குட்படும் பகுதிகளில் போரதீவுப்பற்று பிரதேசம் முக்கிய இடம் பெறுகின்றது. இப்பிரதேசத்தில் ஏற்படும் அனர்த்தங்களை கையாள்வதற்கு பிரதேச மட்டத்தில் நாம்
பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இப்பிரதேசத்தில் வருடாந்தம் வரட்சி, மற்றும், வெள்ளம் போன்ற அனர்த்தங்களை எதிர் கொண்டு வருகின்றோம்.
என போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தெரிவித்தார்.
போரதீவுப் பற்று பிரதேச செயலகத்திற்குட்டபட்ட அனர்த்தங்களால் பாதிக்கபடுகின்ற கிராம சேவையானர் பிரிவுகளிலுள்ள, கிராம மட்ட அனர்த முகாமைத்துவக் குழு அங்கத்தவர்களுக்கான, முதலுதவிப் பயிற்சிநெறி ஒன்று வெள்ளிக்கிழமை (08) போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தலைமையில் வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முதல் காலாண்டுக்கான நிழ்ச்சி நிரலுக்கமைய மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின், அனர்த முகாமைத்துவப் பிரிவினால் இப்யிற்சிநெறி நடாத்தப்பட்டது.
இதன்போது மட்டக்கள்பபு மாவட்ட அனரத்த முகாமைத்துவ உத்தவியாளர் த.துஷ்யந்தன், பிரதேச அனர்த்த நிவாரண சேவை உத்தியோகஸ்தர் சு.ரவிக்குமார், வெல்லாவெளி கிராம சேவை உத்தியோகஸ்தர் எஸ்.லக்ஸகுமார், இப்பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவ குழு அங்கத்தவர்கள். என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக்கிளையின் தலைவர் த.வசந்தராசா, மற்றும் ச.கணேசலிங்கம் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு பயிற்சியினை வழங்கினர். இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே மேற்படி பிரதேச செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் அவர் மேலும் குறிப்பிடுகையில்….
ஏப்ரல் மாதம் தொடக்கம் செப்டம்பர் மாதம் வரையான காலம் வரட்சிக் காலப் பகுதியாகவும், இக்காலப் பகுதியில் மக்களுக்கு, குடிநீர் போன்ற வசதிகளை ஏற்படுத்துகின்றோம். இதுபோன்று மாரிகாலங்களில் வெள்ள அனர்தங்களும் ஏற்படுகின்றன. இவ்வாறான வெள்ள அனர்த்த காலங்களில் கடந்த காலத்தில் உயிர் இழப்புக்களும் ஏற்பட்டிருக்கின்றன.
எதிர் காலத்தில் வரும் வெள்ள அனர்த்தங்களை எதிர்கொள்ளக் கூடிய வகையில் இப்பிரதேசத்தில் கட்டுமானப் பணிகளையும், அனர்த்த ஆபத்துக் குறைப்பு பயிற்சிகளையும், அனர்த்த விழிப்பூட்டல்கள், முதலுதவிப் பயிற்சிகளையும், கிராம மட்டத்தில் செய்துள்ளோம்.
இவற்றில் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின், அனர்த முகாமைத்துவப் பிரிவினால் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் பயிற்றுனர்களுடாக, இப்பயிற்சி நடைபெறுகின்றது.
கடந்த வருடம் இப்பிரதேசத்தில் கடமைபுரியும் உத்தியோகஸ்தர்களுக்கான அடிப்படை முதலுதவிப் பயிற்சி நடைபெற்றன, தற்போது கிராம மட்ட இளைஞர் யுவதிகளுக்கான முதலுதவிப் பயிற்சிகள் நடைபெறுகின்றன. இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு இப்பிரதேசத்தில் எதிர்காலத்தில் வரக்கூடிய அனர்த்தங்களை எதிர் கொள்ளக் கூடியதாக அமைகின்றது.
இப்பிரதேச மக்கள் அடிப்படை முதலுதவிப் பயிற்சினைப் பெறுவதன் மூலம், கிராம மட்டத்தில் எதிர் கொள்ளும் சம்பவங்களை எவ்வாறு கையாள்வது போன்ற பல விடையங்களை அறிவதோடு, பிறருக்கும் முதலுதவி பற்றிய விடையங்களை எடுத்துரைக்கலாம். இவ்வாறு பயிற்சிகளைப் பெறுபவர்கள்,
எதிர் காலத்தில் சிறந்த முதலுதவியாளராக மிளிரமுடியும்; என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment