கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அவரின், தனிப்பட்ட நிதியின் மூலம் மட்டக்களப்பு மாவட்டம், அம்பிளாந்துறையைச்
சேர்ந்த முன்னாள் போராளியான கனகசபை லவக்குமார் என்பவருக்கு ஒரு தொகைப்பணம் நன்கொடையாக வியாழக் கிழமை (07) வழங்கி வைத்தார்.
யுத்தம் காரணமாக இரு கண் பார்வையை இழந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாகிய இவரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாகவும் சுய தொழிலை மேற்கொள்ளும் முகமாகவும் இவ்வுதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment