படித்துவிட்டு தொழிற் பயிற்சியற்றிருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 65 இளைஞர் யுவதிகளுக்கு இலவச தொழிற் பயிற்சி முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அதன் பிராந்திய இணைப்பாளர் எம்.எஸ். சிறாஸ்
தெரிவித்தார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்த அவர்,
அல் அஸ்மாக் மற்றும் முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்காவின் பொருளாதார வலுவூட்டல் நிழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையுடன் இணைந்து தொழிற் பயிற்சியற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழிற் பயிற்சியளிக்கும் திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் மோட்டார் சைக்கிள் திருத்துநர் என்விகியூ NVQ மட்டம் 4 இற்கும், மேலும் 25 இளைஞர் யுவதிகள் கணிம அளவையியல் என்விகியூ NVQ மட்டம் 5 இற்கும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.
தெரிவு செய்யப்படும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த இந்த இளைஞர் யுவதிகள் இலவசமாக வழங்கப்படும் இந்த தொழிற் பயிற்சி நெறிகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் கவர்ச்சிகரமான வருமானத்துடன் அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கிராக்கியுடன் இருக்கின்றன என்றும் அவர் சொன்னார்.
0 Comments:
Post a Comment