( விஜி)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தூரநோக்கு சிந்தனையுடனும், கல்வியமைச்சின் சுற்றுநிருபத்துக்கு இணங்கவும் தமிழ்சிங்கள புத்தாண்டை முன்னிட்டு
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியினால் ஒழுங்கு செய்யப்பட்ட “சித்திரை விளையாட்டுப்போட்டிகள்" வியாழக்கிழமை காலை 9.00மணியளவில் பாடசாலையில் அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விளையாட்டுப் போட்டியில் மரதன் ஓட்டம், வனிஸ்சாப்பிடுதல், சாக்குஓட்டம், முட்டி உடைத்தல், கிடுகு இழைத்தல், கயிறு இழைத்தல், ஊசிக்குள் நூல்கோருத்தல், உட்பட பலபோட்டிகள் நடைபெற்றது.
முட்டிஉடைத்தல்போட்டியில் ஆசிரியை திருமதி பீ.நாகராசா முட்டியை உடைத்து முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார். ஆசிரியை பிரியங்கனி திசாநாயக்கா அவர்களின் முழுமையான நெறிப்படுத்தலின் மூலம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். மாணவர்கள், ஆசிரியர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
இங்நிகழ்வில் பிரதிஅதிபர் கே.பாஸ்கரன், பழையமாணவசங்கத்தின் தலைவர் சசிகரன்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் திருமதி சக்திவேல், ஆகியோர்களுடன் மாணவர்கள்,பெற்றோர்கள் கலந்துகொண்டதுடன் வெற்றி பெற்றவர்களுக்கான பெறுமதியான பரிசுகளும் வழங்கப்பட்டது. இவ்விளையாட்டுப் போட்டிகள் பழமையான பாரம்பரியங்களுடன் நடைபெற்றது.
0 Comments:
Post a Comment