1 Apr 2016

உலக நீர் தினத்தை முன்னிட்டு மரநடும் நிகழ்வு

SHARE
(எம்.எஸ்.எம்.சறூக்) 

உலக நீர் தினம் 2016 (மார்ச் 22) யை முன்னிட்டு இடம் பெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறுபட்ட நிகழ்வுகளில் ஒன்றான மரநடும் நிகழ்வு அண்மையில் தேசிய
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தில் பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் டி.எ. பிரகாஷ் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் டி.எ. பிரகாஷ் பொறியியலாளர், எஸ்.எல். ஹாலிதீன் (இயக்குதல் மற்றும் பராமரிப்பு) பொறியியலாளர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் உலக நீர் தினம் 2016 (மார்ச் 22) யை முன்னிட்டு மிக சிறப்பாக இடம் பெற்றது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.



SHARE

Author: verified_user

0 Comments: