(க.விஜி)
துறைநீலாவணை தெற்கு முதலாம் பிரிவுக்கான களம் பாலர் பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன் சிறுவர் சந்தை நிகழ்வு துறைநீலாவணை தெற்கு பல்தேவைக்கட்டிடத்தில் துறைநீலாவணை தெற்கு முதலாம் பிரிவுக்கான கிராம
அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளர் ஜீவரெத்தினம் குணரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.துறைநீலாவணை தெற்கு முதலாம் பிரிவுக்கான களம் பாலர் பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன் சிறுவர் சந்தை நிகழ்வு துறைநீலாவணை தெற்கு பல்தேவைக்கட்டிடத்தில் துறைநீலாவணை தெற்கு முதலாம் பிரிவுக்கான கிராம
இந்நிகழ்விற்கு பட்டிருப்பு வலயக்கல்வி அலுவகத்தின் ஆரம்ப உதவிகல்விப் பணிப்பாளர் ஆர்.வரதராஜன், முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோஸ்தர் பீ.அருந்ததி, கிராமசேவை உத்தியோகஸ்தர் தி.கோகுலராஜ், பாலர்பாடசாலை ஆசிரிகள், பெற்றோர்கள், சிறார்கள், உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
சிறார்களின் நடமாடும் சந்தையில். 25 சிறார்களின் வீட்டில் இயற்கை முறையில் செய்கை பண்ணப்பட்ட மரக்கறிகள், சிறார்களின் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. திட்டமிடலில் சிறுவர்களின் புத்திசாதுரியமான ஆற்றல்கள் இதன்போது வெளிக் கொனரப்பட்டமை சிறப்பம்சமாகும்.
0 Comments:
Post a Comment