14 Apr 2016

களுவாஞ்சிகுடி நியு ஒலும்பிக் விளையாட்டுக் கழகத்தின் 50 வது வருடாந்த சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவும் கலை விழாவும்

SHARE
களுவாஞ்சிகுடி நியு ஒலும்பிக் விளையாட்டுக் கழகத்தின் 50 வது வருடாந்த  சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவும் கலை விழாவும் எதிர்வரும் 15.04.2016 திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் 19.04.2016 திகதி செவ்வாய் கிழமை வரை நிகழ்வுகள் கழகத்தலைவர் க.பகிரதன் தலைமையில் நடைபெறவுள்ளது.

50 வது வருடத்தினை முன்னிட்டு சிறப்பாக இடம் பெறவிருக்கும் இவ்விழையாட்டு விழா 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது அதாவது முதலாங்கட்டம் 15.04.2016 பி.ப 2 மணிக்கு நூல் வெளியீடும் பரிசளிப்பு விழாவும.; இரண்டாம் கட்டடம் 16.04.2016 காலை 7 மணிக்கு சைக்கிள் ஓட்டம், மூன்றாங்கட்டம் 16.04.2016 மாலை 7 மணிக்கு ஒலும்பிக் தீபம் ஏற்றல். நான்காம் கட்டம் 17.04.2016 காலை 7 மணிக்கு மரதன் ஓட்டம். பி.ப. ஐந்தாம் கட்டம் 17.04.2016 2 மணிக்கு விளையாட்டு விழா. ஆறாங்கட்டம் 18.04.2016 மாலை 7 மணிக்கு கலைவிழா. ஏழாங்கட்டம் 19.04.2016 மாலை 7 மணிக்கு இசை நிகழ்ச்சி என்பன சிறப்பாக நடைபெறவுள்ளது.

  அனைத்து நிகழ்வுகளிலும், அரசியல்வாதிகள் மற்றும் ,அதிகாரிகள் என பலர் அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் 

  அனைத்து நிகழ்வுகளையும் கண்டுகளிக்க அனைவரையும்  அன்புடன் வருமாறு அழைக்கின்றனர் களுவாஞ்சிகுடி நியு ஒலும்பிக் விளையாட்டுக் கழகத்தினர்

SHARE

Author: verified_user

0 Comments: