7 Apr 2016

முச்சக்கரவண்டி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காயம்

SHARE
வியாழக்கிழமை அதிகாலை வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை - கடவத்தமடு எனும் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் மிச்நகர் பகுதியை சேர்ந்த கிழக்கு பல்கலைக் கழக ஊழியரான இப்றாஹிம் இஸ்மாயில் (வயது 55) என்பவரின் குடும்பத்தினரே விபத்தில் காயமடைந்து வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி விபத்தில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற இஸ்மாயில் மற்றும் அவரது மனைவி பிள்ளைகளான நிப்றாஸ், அஸ்லம் ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.



SHARE

Author: verified_user

0 Comments: