கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 25 வருட கால சேவையைப் பூர்த்தி செய்த கல்வி மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு புதன்கிழமை கிழக்குப் பல்கலைக்
கழக நல்லையா மண்டபத்தில் இடம்பெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபனப் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் கலாநிதி ரீ. ஜயசிங்கம் அப்பல்கலைக் கழகத்தின் தகுதி வாய்ந்த நிருவாக முன்னாள் அதிகாரி உமா குமாரசுவாமி ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 30 வருட காலம் சேவையாற்றிய கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் 48 பேரும், 25 வருட காலம் சேவையாற்றிய கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் 43 பேரும் பாராட்டி கௌரவிக்கப்ட்டதோடு அவர்களுக்கு சேவைச் சிறப்பு சான்றிதழ்களும் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் தகுதி வாய்ந்த நிருவாக முன்னாள் அதிகாரி உமா குமாரசுவாமி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சேவையாளர்கள்; சார்பில் பலர் உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துப் பேசினர்.
0 Comments:
Post a Comment