29 Mar 2016

கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஆலோசனைக்கமைய பிரதேச தூய்மையாக்கல் கொத்தணி வேலைத் திட்டம்

SHARE
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் அவர்களின் ஆலோசனைக்கமைவாக பிரதேச தூய்மையாக்கல் கொத்தணி வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ஏறாவூர்
நகர சபைச் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் தெரிவித்தார்.

இதற்கமைவாக இவ்வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஏறாவூர் நகர சபைப் பிரிவில் தூய்மையாக்கல் பணிகள் மட்டக்களப்பு மாநகர சபை, மற்றும் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச சபை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டதாக நகர சபைச் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் தெரிவித்தார்.

நகரங்களைத் தூய்மையாக வைத்திருத்தலுக்காக அருகிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் ஆளணி உட்பட இன்ன பிற வளங்களைப் பயன்படுத்தி பிரதேசங்களைத் துப்புரவாக்கும் கொத்தணி வேலைத்திட்டம் மிகவும் வெற்றியளித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதன்படி ஏறாவூர் நகர பிரதேசத்தில் இன்று தொடங்கப்பட்ட நகரைத் தூய்மையாக்கும் பணிக்காக மட்டக்களப்பு மாநகர சபையிலிருந்து 20 பணியாளர்களும் 4 வாகனங்களும், ஏறாவூர்ப் பற்று செங்கலடி பிரதேச சபையிலிருந்து 9 பணியாளர்களும் மூன்று வாகனங்களும், ஏறாவூர் நகர சபையிலிருந்து 27 பணியாளர்களும் 5 வாகனங்களும் பயன்படுத்தப்பட்டதாக செயலாளர் ஹமீம் மேலும் கூறினார். 

SHARE

Author: verified_user

0 Comments: