29 Mar 2016

31 ஆம் திகதிக்கு முன்னர் விவசாயிகள் கமநல மத்திய நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும்.

SHARE
(இ.சுதா)

நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தினால் விவசாயிகளின் நலன் கருதி புதிதாக அறிமுகப் படுத்தப்படவுள்ள உரமானியத்திற்குப் பதிலீடாக காசோலை வழங்கும் வேலைத் திட்டத்திற்கு விவசாயிகள் தொடர்பான
தரவு சேகரிக்கும் நிகழ்வு நாடு பூராகவுள்ள கமநல மத்திய நிலையங்களில் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் விவசாயிகள் தமது நெற் செய்கை தொடர்பான சகல விபரங்களையும் எதிர் வரும் 31ம் திகதிக்கு முன்னர் தமது பிரதேசத்திலுள்ள கமநல மத்திய நிலையங்களில் பதிவு செய்ய வேண்டுமென சகல கலநல உத்தியோகத்தர்களுக்கும் கடிதம் மூலமாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

விவசாய நடவடிக்கை தொடர்பான சரியான தகவல்களை வழங்காத விவசாயிகளுக்கு மானிய அடிப்படையிலான உரமானியத்திற்கான காசோலை வழங்கப்படுவதில் சிரமம் ஏற்படும் எனவும் விவசாயிகள் தொடர்பான தகவல்கள் கணனி மயப்படுத்தப் படவுள்ளதாக விவசாயத் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: