கிழக்கு மாகாண முதலமைச்சரின் பாரிய முயற்சியினால் கிழக்கை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் அரச நிறுவனமும் அரச சார்பற்ற தனியார் துறையினருமான ஹமீடியா ஆடை உற்பத்தி நிறுவனமும் இணைந்து சம்மாந்துறையில் பாரிய கைத்தொழிற் பேட்டையுடன் கூடிய ஆடைத் தொழிற்சாலையினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா முதலமைச்சரினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது .
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பங்கேற்று சிறப்பித்தார் .
இக் கைத்தொழில் பேட்டையானது 14 1/2 கோடி ரூபா செலவில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் சகல வசதிகளுடனானதும் பாரிய தொழில் நுட்பங்களை உள்ளடக்கியதுமான ஆடை தொழிற்சாலையும் அமைக்கப்படவுள்ளது .
0 Comments:
Post a Comment