க.விஜி மட்டக்களப்பு புதூர் விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியும்,திறனாய்வு நிகழ்வுகளும் அதிபர் ரீ.அருமைத்துரை தலைமையில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அபிவிருத்தி இணைத்தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன் கிழக்கு மாகாண சபைஉறுப்பினர் இரா.துரைரெத்தினம் வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் ,மட்டு.மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார், கோட்டக்கல்விபணிப்பாளர் ஏ.சுகுமாறன் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள், பழையமாணவர்கள்,பெற்றோர்கள், கலந்து கொண்டனர்.
தேசிய கொடி, வலயக்கொடி, பாடசாலைக்கொடி,இல்லக்கொடி ஏற்றப்பட்டடு ,தேசியகீதம் தமிழில் இசைக்கப்பட்டு, ஒலிம்பிக்தீபம் ஏற்றப்பட்டு,மாணவர்களின் சத்தியப்பிரமானத்துடன் விளையாட்டுகள் ஆரம்பிக்கப்பட்டது. அணிநடை,உடற்பயிற்சி கண்காட்சி,100,200,400 மீற்றர் ஓட்டப்போட்டிகள், மிட்டாய் ஓட்டம்,இல்லச்சோடனை,பழையமாணவர்களுக்கான போட்டிகள்,பெற்றோர்களுக்கான சங்கீதக்கதிரை,உட்பட சுவட்டு நிகழ்ச்சிகள் போன்றன நடைபெற்றன.
கம்பர்,வள்ளுவர்,பாரதி இல்லங்களுக்கிடையில் நடைபெற்றபோது 332புள்ளிகளைப் பெற்று கம்பர் இல்லம் முதலாம் இடத்தையும்,303 புள்ளிகளைப்பெற்று வள்ளுவர் இல்லம் இரண்டாம் இடத்தினையும்,301 புள்ளிகளைப்பெற்று பாரதி இல்லம் மூன்றாம் இடத்தினையும் நிரல்படுத்தப்பட்டது.இவர்களுக்கு அதிதிகளால் வெற்றிக்கேடயங்கள்,சான்றீதழ்கள், பரிசுப்பொதிகள் வழங்கப்பட்டது.
0 Comments:
Post a Comment