குருநாகல் மாவட்டம் கொக்கரல்ல பொலிஸ் பிரிவில் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் மரணித்துள்ளதாக கொக்கரல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடியில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த வேன் கொக்கரல்ல பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருக்கும் போது வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியே விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில் மட்டக்களப்பு காத்தான்குடி அஷ்ஷஹீட் அஹமட்லெவ்வை (கபுரடி வீதி) வீதியைச்சேர்ந்த சிறீலங்கா டெலிகொம் முன்னாள் உத்தியோகத்தரான முஹம்மத் பஷீர் மரணமடைந்துள்ளார்.
இந்த விபத்தில் வாகனத்தில் சென்ற இன்னும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலதிக விசாரணைகளை கொக்கரல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment