(டிலா)
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் நிதியொதுக்கீட்டின் கீழ் கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இயங்கும் 44 வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள்
மற்றும் வைத்தியசாலைகளுக்கு தேவையான அத்தியவசியத் தளபாடங்களை கையளிக்கும் நிகழ்வு (10.03.2016) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.
மற்றும் வைத்தியசாலைகளுக்கு தேவையான அத்தியவசியத் தளபாடங்களை கையளிக்கும் நிகழ்வு (10.03.2016) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை சமூகசேவைகள் அமைச்சர் ஏ.எல்.முகம்மட் நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வில் 6 கோடி ரூபா நிதியொதுக்கீட்டின் மூலம் பெறப்பட்ட உபகரணங்கள் கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிமனை காரியாலயத்தின் கீழ் இயங்கும் தள வைத்தியசாலை – 03, மாவட்ட வைத்தியசாலை – 11, ஆரம்ப பராமரிப்பு பிரவு வைத்தியசாலை – 12, விஷேட வைத்திய சேவைப் பிரிவு – 05 மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் – 13 போன்றவற்றுக்கு; கையளிக்கப்பட்டது.
அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், கிழக்கு மாகாண நிர்வாக செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், தோற்றாநோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.ஹாரிஸ், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஏ.சி.எம்.பஸால் உட்பட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment