17 Mar 2016

மின்சார நுகர்வேர்களின் உரிமைகளும், கடமைகளும் தொடர்பாக கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு, விளக்கமளிக்கும் நிகழ்வு

SHARE
மின்சார நுகர்வேர்களின் உரிமைகளும், கடமைகளும் தொடர்பாக
கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு, விளக்கமளிக்கும் நிகழ்வு ஒன்று வியாழக் கிழமை (17) மட்டக்கள்ப்பு கல்லடி சன்றையிஸ் விடுதியில் நடைபெற்றது.

இலங்கைப் பொதுப் பயன்பாடு ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில், மட்டக்களப்பு, அம்பாறை, மற்றும் திருகோணமலை மாட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலார்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மின்சாரநுகர்வோர்களின் உரிமைகளும், கடமைகளும், ஒரு புதிய மின் இணைப்பபை பெற்றுக்கொள்தல், மின்இணைப்பைத் துண்டிக்கும் போது மற்றும், மீள இணைப்பை ஏற்படுத்திக் கொள்தல் போன் பல விடையங்கள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டன. 

இந்நிகழ்வில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குவின் உதவிப் பணிப்பாளர்களான வி.விமலாதித்தன், டப்ளியு.ஏ.தனுஜ் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை வளங்கினர்.








SHARE

Author: verified_user

0 Comments: