17 Mar 2016

ஆசிய ஹோட்டல் மற்றும் உல்லாச சர்வதேச மாநாட்டின்’ ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் 26,27,28 ஆம் திகதிகளில்

SHARE
இலங்கையில் இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ளஆசிய ஹோட்டல் மற்றும் உல்லாச சர்வதேச மாநாட்டின்ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் 26,27,28 ஆம் திகதிகளில் டுபாயில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகவும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்
ஆசிய ஹோட்டல் மற்றும் உல்லாச சர்வதேச மாநாடுநவம்பர் 27,28,29 ஆம் திகதிகளில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் 80 நாடுகளைச் சேர்ந்த சுமார் 900 முதலீட்டாளர்கள் பங்கேற்கவுள்ளனர்

இந்நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்

இது தொடர்பிலான ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் 26,27,28ஆம் திகதிகளில் டுபாயில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளதுடன், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ் விசேட அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளார்
SHARE

Author: verified_user

0 Comments: