5 Feb 2016

மருதமுனை லெஜன்ஸ் இளைஞர் கழகம் ஏற்பாடுசெய்த சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு

SHARE
(ஏ.எல்.எம்.ஸினாஸ்)

மருதமுனை லெஜன்ஸ் இளைஞர் கழகம் ஏற்பாடுசெய்த சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு கழகத்தின் தலைவர் எம்.எம்.ஹசான் தலைமையில் (05.02.2016) பாண்டிருப்பு அல்-மினன் வித்தியாலையத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் மருதமுனை மத்தியகுழுத் தலைவர் எம்.எச்.அல்இஹ்ஸான் கலந்து கொண்டார். மற்றும் இளைஞர் சேவை அதிகாரி எம்.ரீ.எம்.ஹாறுன், அதிபர் எம்.ஜெ.ஹஸீப், ஓய்வுபெற்ற அதிபர் ஏ.எல்.வாஹித் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் 2015 ஆம் ஆண்டில் பிரதேச மட்டத்தில் சாதனை படைத்த இளைஞர்கள் பதக்கம், சன்றிதழ் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.










SHARE

Author: verified_user

0 Comments: