6 Feb 2016

அழகியற் செயற்பாடுகள் மூலமான உளவியல் திறன் விருத்தி, கைப்பணி ஆக்கப் பயிற்சி

SHARE
அழகியற் செயற்பாடுகள் மூலமான உளவியல் திறன் விருத்தியும் கைப்பணி ஆக்கமும் என்ற தொனிப்பொருளில்  மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் இன்று காலைமுதல் நடைபெற்றது.
கலாசாலையின் மதல்வர் ஏ.எஸ்.யோகராஜாவின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்காக இந்தபயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது.

அரசினர் ஆசிரிய கலாசாலை மண்டபத்தில் நடைபெற்ற இப் பயிற்சிப்பட்டறையில் வளவாளர்களாக கல்வியியலாளர் சேவையைச் சேர்ந்த விரிவுரையாளர் கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா, விரிவுரையாளர் ஏ.ரவீந்திரன் ஆகியோர் செயற்பட்டனர்.

இப் பயிற்சிப் பட்டறையில் ஆசிசிரியர்கள் மற்றும் முன்பள்ளி மாணவர்களின் உளத்திறன்களை  விருத்தி செய்வதற்கான செயற்பாட்டுப் பயிற்சி, கைவினை ஆக்கத்திறன் பயிற்சி, உடற்பயிற்சி, தியானப்பயிற்சி, அவதானித்தல், கற்பனையாற்றல் விருத்தி, திட்டமிடல் விரைவான முடிவெடுப்பதற்கான பயிற்சிகள், நேர முகாமைத்துவம்,  உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
இலவசமாக நடைபெற்ற இப் பயிற்சி நெறிக்கு அரசினர் ஆசிரிய கலாசாலை அனுசரணையை வழங்கியிருந்து.









SHARE

Author: verified_user

0 Comments: