16 Feb 2016

பாரம்பரிய முறைப்படி வெல்லாவெளியில் காலசார மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டது-(வீடியோ)

SHARE
தமிழ், இந்து சமய கலாசார பாரம்பரிய முறைப்படி, மட்டக்களப்பு மாட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலயத்திற்குட்பட்ட காலாசார மத்திய நிலையம் இன்று  செவ்வாயக் கிழமை (16) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
157 லெட்சம் ரூபாய் செலவில் கலாசார அலுவல்கள், அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிருமாணிக்கப்பட்ட இக்கலாசார மத்திய நிலையத்தை 

உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி, மற்றும், கலாசார அலுவல்கள், அமைச்சர்  எஸ்பி.நாவின்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.இதன்போது அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொதுமக்கள், கலைஞர்கள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பன்னாங்கில் தென்னம் குருத்தினால் வரவேற்பு பதாகை இடப்பட்டு, தமிழ், மற்றும் இந்து சமய பாரலம்பரிய முறைப்படி, குத்துவிளக்கு, நிறைகுடம், வட்டாமடை,  நெல்நிரம்பிய மரைக்கால், நீர் நிரம்பிய வெங்கல கலசம், நிறைகுடம், பிள்ளையார், மற்றும் சரஸ்வதி ஆகிய சுவாமி படங்களுடன், கும்மி வசந்த ஆகிய கிராமியக் கலைகளுடனும், அதிதிகள் அழைத்து வரப்பட்டு, இக்கலாசார மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது, கலைநிகழ்வுகள் மேடையேற்றப்பட்டதுடன், போரதீவுப் பற்று பிரதேச கலைஞர்களை இக்கலாசார மத்திய நிலையத்தில் அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையினையும், அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.












































b
SHARE

Author: verified_user

1 Comments:

Unknown said...

Please look in to LETTERS CORRECTION.
sAHA