மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவு மீராகேணி கிராமத்தில் உள்ள வீதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பது பற்றி பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததின் அடிப்படையில் இளைஞர் ஒருவர் ஞாயிறன்று 27.02.2016 காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் மீராகேணி, ஆர்.டி.எஸ். வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய முஸ்தபா முர்ஷலின் என்பவர் கைது செய்யப்படும்போது அவரிடமிருந்து 4080 மில்லி கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதுபற்றிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்
0 Comments:
Post a Comment