28 Feb 2016

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை உதயம்

SHARE
(டிலா)
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களின் திறனை அபிவிருத்தி செய்யவும் சமூக, சமய, பொருளாதார, கல்வி சார்ந்த விடயங்களில் சமூக பொறுப்புடனும் செயற்படும் நோக்கிலும் “அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை” (Amparai District Journalists’ Forum)  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளரும், முன்னாள் ஊடகவியலாளருமான கலாபூசணம் எம்.ஐ.எம்.முஸ்தபா தலைமையில்  (28.02.2016) நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாள்கள் பலர் கலந்து கொண்டு; கருத்துக்களை தெரிவித்தனர். ஏற்கனவே அம்பாரை மாவட்டத்தில் ஊடகவியலாளர் சம்மேளனம் என்ற அமைப்பு செயற்பட்டாலும் இந்த அமைப்பானது ஊடகவியலாளர்களின் நலன்களில் அக்கறையற்றதொரு அமைப்பாகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஊடகவியலாளர்களின் தகைமையை விருத்திசெய்யும் எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை, இளம் ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கவில்லை, வெளிப்படைத்தன்மையாக நடந்து கொள்ளவில்லை, இறுதியாக நடைபெற்ற நிருவாகத்தெரிவு கூட்டத்துக்கு பலருக்கு காரணமின்றி கடிதம் அனுப்பப்படவில்லை, ஊடகவியலாளர்களின் நலனில் அக்கறை கொள்ளாது சுயநலனுக்காக சம்மேளனம் செய்பட்ட வரலாற்று சம்பவங்கள் பலதை பலரும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் (Amparai District Journalists’ Forum)  நிருவாகத் தெரிவு இடம்பெற்றது பின்வருவோர் தெரிவுசெய்யப்பட்டார்கள். 
 01.தலைவர்: சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் எம்.ஏ.பகுர்தீன் 
02. செயலாளர்: சிரேஸ்ட ஊடகவியலாளர் எம்.சஹாப்தீன் 
03. பொருளாளர்: யூ.எல்.மப்றூக் 
04. அமைப்பாளர்: யூ.எல்.எம்.றியாஸ் 
05. பிரதித் தலைவர்கள்: எஸ்.எல்.எம்.பிக்கீர் மற்றும் எம்.எஸ்.எம்.ஏ.மலீக் 
06. உபசெயலாளர்: வி.சுகிர்தகுமார் 
07 கணக்காய்வாளர்: ஏ.பி.எம்.அஸ்ஹர்
08. நிர்வாகக் குழு உறுப்பினர்கள்: ஏ.எல்.எம்.சினாஸ் (மருதமுனை), எஸ்.எல்.எம்.றம்ஸான் (கல்முனை), றியாத் ஏ மஜீத் (சாய்ந்தமருது), ஏ.அஸ்ஹர் (மாளிகைக்காடு), எம்.ஐ.ஏ.கபூர் (நிந்தவூர்), எம்.எஸ்.எம்.ஹனீபா (ஒலுவில்), பீ.முஹாஜிரீன் (பாலமுனை), எம்.எப்.றிபாஸ் (அட்டாளைச்சேனை), என்.எம்.எம்.புவாத் (சம்மாந்துறை), யூ.கே.காலிதீன்

















SHARE

Author: verified_user

0 Comments: