27 Feb 2016

மாவட்ட நெற்செய்கையாளர்களுடனான விசேட கலந்துரையாடல்

SHARE
மட்டக்களப்பு நெற்செய்கை பாதிப்பு தொடர்பில் நெற்செய்கையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் நிகழ்வு நேற்று (26) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ்  தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நெற்செய்கையில் கபில நிற தத்திகளால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக மாவட்ட விவசாயிகளின் விவசாயச் செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் பிரதம அதிதியாகத் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் கலந்து கொண்டதுடன், விவசாய அமைச்சின் செயலாளர் சிவநாதன், விவசாயத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் ஹூசைன், மாவட்டப் பணிப்பாளர் திலகராஜ், கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி நிரஞ்சலா மற்றும் நெற்செய்கை ஆராயச்சி நிலைய அதிகாரிகள், விவசாயத் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட நெற்செய்கையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மாவட்ட நெற்செய்கையாளர்களுக்கு மேற்படி தாக்கம் ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டதுடன், இதனைக் கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகள் பற்றி அதிகாரிகளால் விளக்கம் கொடுக்கப்பட்டது. பின்னர் நெற்செய்கையாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வும் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: