கடந்த 21ம் திகதி கிளிநொச்சியில் வடகிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக பற்றிய சம்பந்தன் ஐயா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற புதிய அரசியல் தொடர்பான கலந்தாலோசிப்பில்;
கருத்துதெரித்த வடமாகாண முதலமைச்சர் நாங்கள் தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கி அங்கிருந்து மக்களது கருத்துக்களை உள்வாங்கி பெற்றுக்கொள்ளுகின்ற தீர்வுத்திட்டத்தை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவிடம் கையளிப்பதாக கூறியுள்ளார். இது வடக்கு முதல்வர் எங்களது தலைமைத்துவத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றார் என்பதை காட்டுகின்றது. அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக தொடர்ந்து வடக்கு முதல்வர் செயற்படவேண்டுமென எதிர்பார்க்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற 29வது ஆண்டு நிறைவு அஞ்சலி நிகழ்வில் கலந்து உரையாற்றும் போது குறிப்பிட்டார்.
மேலும் உரையாற்றிய அவர்
அழிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட காணமால் செய்யப்பட்ட இனத்தினுடைய பிரதிநிதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக எமது தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கின்றது. இந்த அடிப்படையில் இரா.சம்பந்தன் ஐயா அவர்களின் தலைமையில் எமது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கு உழைத்துக் கொண்டிருக்கின்றது.
சிறந்த ஒரு தீர்வுத்திட்டத்தை பெறுவதற்கு பல வழிகளிலும் உழைக்கின்ற வேளையில் அவசரப்பட்டு பிழையான முடிவுகளை எடுத்து தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மாறாக அல்லது தமிழ்தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் நோக்கில் அல்லது அதற்கு மாற்றுக்கருத்துக்களை முன்வைக்கும் நோக்கில் எந்த அமைப்பாக இருந்தாலும் இவ்வாறான வேலைகளில் ஈடுபடுவது உண்மையாக பிழையானது எனவும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment