19 Feb 2016

கிழக்கு மாகாணத்தில் வருடம் ஒன்றிற்கு 2000 மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகுகின்றார்கள் - வியாளேந்திரன். எம்.பி. (வீடியோ)

SHARE
கிழக்கு மாகாணத்தில் வருடம் ஒன்றிற்கு 2000 மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகுகின்றார்கள். இவ்வாறான இடைவிலகல் முற்றாக நிறுத்தப்படல் வேண்டும். மட்டக்களப்பிலே உள்ள கல்குடா கல்வி வலயம், மண்முனை மேற்கு கல்வி வலயம், போன்றவற்றில் 400 இற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. எமது வருங்கால சந்ததியினரை உருவாக்க வேண்டுமாக இருந்தால் இவ்வாறான வெற்றிடங்கள் நிரப்பப்படல் வேண்டும். இது எமக்கு வழங்கப்பட்டுள்ள தார்மீகப் பொறுப்பாகும்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சா.வியளேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்.தாளங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி வியாழக் கிழமை (18) மாலை வித்தியாலய அதிபர் சா.மதிசுதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…

கடந்த காலத்தில் சிதைக்கப்பட்ட மக்களாக தமிழ் மக்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நாம் பலவற்றை இழந்திருக்கின்றோம், ஆனால் இழக்க முடியாத கல்விச் செல்வத்தை மேலோங்கச் செய்வதற்கு நாம் அனைவரும், செயற்பட வேண்டும். கடந்த 3 தசாப்பத யுத்தத்தில் சகோதர இனத்தவர்கள் ஓடி முடித்த ஓட்டத்தை எமது தமிழ் மக்கள் துரத்திப் பிடிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் அனைத்து துறைகளிலும் எமது தமிழ் சமூகம் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கின்றது. இதிலிருந்து எமது சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எம்மிடம் இருக்கின்றது.

சிறந்த ஆளுமைமிக்க தலைவர்களை எமது தமிழ் சமூகத்திலிருந்து உருவாக்க வேண்டும். அப்போதுதான் அச்சமூகம் சிறந்த நற்பண்புகளை உடையதாக மாற்றம்பெறும். இவற்றுக்காக வேண்டி கல்வியிலும், இணைப்பாட விதானங்களிலும் எமது வருங்கால சந்ததியினராகிய மாணவர்கள் திறமைகளை வெளிக்காட்ட வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் வருடம் ஒன்றிற்கு 2000 மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகுகின்றார்கள். இவ்வாறான இடைவிலகல் முற்றாக நிறுத்தப்படல் வேண்டும். மட்டக்களப்பிலே உள்ள கல்குடா கல்வி வலயம், மண்முனை மேற்கு கல்வி வலயம், போன்றவற்றில் 400 இற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. எமது வருங்கால சந்ததியினரை உருவாக்க வேண்டுமாக இருந்தால் இவ்வாறான வெற்றிடங்கள் நிரப்பப்படல் வேண்டும். இது எமக்கு வழங்கப்பட்டுள்ள தார்மீகப் பொறுப்பாகும்.

தற்போதைய இலங்கை அரசை தமிழ் மக்கள் இன்னும் நம்பியிருக்கின்றார்கள். காரணம் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாங்காலில் யுத்தம் மௌனிக்கப்பட்ட போது,
கடந்த காலத்திலிருந்த அரசு எமது மக்களை பல்வேறு விதங்களில் துன்புறுத்தி, ஏமாற்றியது. ஆனால்  2015 ஜனவரி 8 ஆம் திகதி சிறுபான்மை மக்களின் வாக்குப் பலத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த நல்லட்சி அரசு, ஒருவருடத்தைப் பூர்தி செய்துள்ள போதிலும், எமது மக்களுக்காக ஒரு சில சாதகமான விடையங்களையும், மேற்கொண்டுள்ளது. சில காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன, சில இடங்களில் மீழ் குடியேற்ங்கள் இடம்பெறுகின்றன. தமிழ் அரசியல் கைத்திகளில் சிலர் புணர்வாழ்வுக்காக அனுப்பப் படுகின்றார்கள், இருப்பினும், கால இளுத்தடிப்பில்லாமல் இவ்விடையங்கள், முடிவுக்குக் கொண்டு வரப்படல் வேண்டும்.

கடந்த 2015 ஆம், ஆண்டு 09 முதலாம் திகதி ஆரம்பமான 8 வது நாடாளுமன்றம், இந்த நாட்டிலே ஒரு  அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைத்து, அனனூடாக பாதிக்கப்பட்டுள்ள போயுள்ள சிறுபான்மை மக்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு இந்த அரசு முனைகின்றது. அத்தீர்வு வடக்கு கிழக்கு இணைந்ததாக ஒன்றுபட்ட இலங்கைக்குள், சமஸ்ட்டிக் கட்டமைப்பை எமக்குத் தருவதாக இருக்க வேண்டும்.

கனடாவிலே உள்ள மாநகர சபைக்கு அந்நாட்டு அரசு காணி அதிகாரமும், பொலிஸ் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எமது நாட்டிலே மாகாணசபைக்குக்கூட காணி பொலிஸ் அதிகாரத்தை இந்நாட்டு அரசு வழங்க முடியாதுள்ளது.  வெள்ளையார்கள் பெரும்பான்மையாகவும், 3 லெட்சத்திற்கு அதிகமாக தமிழர்கள், வாழும் கனடா நாட்டில் தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் காணப்படுகின்றது. இதுபோல் நம்மாட்டில் சிறுபான்மை மக்களுக்குரிய ஜனநாயகத் தன்மைகளை விட்டுக்கொடுகிகன்ற மனப்பாங்குகள் பெரும்பான்மை மக்களுக்குள் இடம் பெறவேண்டும்.

உலகத்திலே காணமாணல் போனவர்களைக் கொண்ட இரண்டாவது நாடாக இலங்கை இருக்கின்றது.  இந்நிலையில், எதிர் வரும் 23 ஆம் திகதி நாடாளுமன்றில் காணாமல் போனவர்களின் விவாதம் எடுத்துக் கொள்ளப்பட விருக்கின்றது. இவர்களுக்குத் தேவையான நியாய பூர்வமான நிவாரணத்தை இலங்கை அரசு முன்வைக்க வேண்டும்.

கடந்த 2 வாரங்கள் கனடா நாட்டில் தங்கியிருந்தேன் அங்குள்ள புலம் யெர் தமிழ் உறவுகள் எமது மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளார்கள், நான் அங்கு, கொண்டு சென்ற தேவைப்பாடுகளுள் 70 வீதமானவைகளுக்கு கனடா தேசத்திலே வாங்கின்ற எமது புலம் பெயர் உறவுகள் உதவுவதற்குத் தயாராகவுள்ளார்கள் எமது பன்முகப் படுத்தப்பட்ட நிதிகளுக்கு அப்பால் இந்தியா, மற்றும், புலம் பெயர் உறவுகளிடமிருந்தும் உதவிகளைப் பெற்று எமது மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளோம். என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: