தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் சிறைச்சாலை பாதுகாப்புடன் சென்று எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபை அமர்வில் பங்குபற்றுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா முன்னிலையில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டபோது மாகாணசபை உறுப்பினரின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment