21 Jan 2016

திருகோணமலை கடத்தப்பட்டு காணாமற் ஆக்கப்பட்ட குடும்பத்தினர் உறவுகளின் கத்தின் ஆதாங்கம்

SHARE
(அப்துல்சலாம் யாசீம் )

பொங்கல் விழா தினத்தன்று வடமாகாணத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போர்காலத்தில் காணாமற்போன உறவுகள் சிலர் உயிருடன் இருப்பதற்கு இல்லை இவர்கள் இறந்துவிட்டனர் என்ற தகவல் காணாமற்போன உறவுகளின் குடும்பத்திற்கு இடிமேல் இடிவிழுந்து பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இந்த தகவல் எமது திருகோணமலை மாவட்ட கடத்தப்பட்டு காணாமற் ஆக்கப்பட்ட குடும்பத்தின் உறவுகளின் சங்கம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றது.
பிரதமர் ரணில் விக்கரமசிங்க வடமாகாணத்தில் தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திருவிழாவில் தழிமர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்து தமிழ் மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கான ஆசிர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் வெளிப்படுத்துவார் என எதிர்பார்தால் அவர் தமிழ் மக்களை மையப்படுத்தி காணாமற் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் குடும்பத்திற்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இரத்தக்கண்ணீர் பொங்கும் அளவிற்கு வார்த்தைகளை வெளிப்படுத்தியது எம் போன்ற குடும்பத்தினருக்கு வேதனையும் துன்பமும் ஆராதுயரமும் மேலும் அதிகரித்துள்ளது.

பிரதமரின் வெளிப்படையாக கூறிய இந்த தகவல் காணாமற் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை விடயங்கள் தடயங்கள் என்பன எம் நாட்டு பிரதமருக்கும் தொடர்புகள் இருப்பதற்கான வழி முறை உள்ளது என்பதை தெட்டத்தெளிவாக எமக்கு தெரிகின்றது. எமது உறவுகளின் உயிர்கள் களவாடப்பட்டு உயிஜருடன் இருப்பதாக இல்லை என்றால் இந்த விடயம் சாத்தியமானதாக உள்ளதா? இவர்களுக்கு என்ன நடந்தது? இந்த விடயத்தில் இவருக்கும் பங்கு உண்டா? எப்படி பிரதமர் காணாமற் ஆக்கப்பட்ட உறவுகள் சிலர் உயிருடன் இல்லை என்பதை தமிழ் மக்களின் பண்டிகையில் பகிரங்தாக வெளிப்படுத்துவர்? ஆதாரங்கள் உள்ளதா? மக்களின் பல கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா? நாட்டில் பிரதமரே இப்படியான செய்தியை கூறினால் எம் நிலைதான் என்ன? இதுதானா நல்லாட்சி? நல்லிணக்கம்?

இந்த புதிய ஆண்டின் பொங்கல் விழாவில் பிரதமர் அவர்கள் மக்களின் மனதை புண்படுத்தி வேலால் குத்திய கதைபோல மேலும் மேலும் துயரங்களை வெளிப்படுத்தியது எமது காணாமற் ஆக்கப்பட்ட குடும்பத்தினரை “உயிருடன் புதைகுழியில் புதைப்பதற்கு சமனானது. எப்படி ஓர் நல்ல நாளில் இத்தகவல்களை மனம் வந்து வெளிப்படுத்தினாரோ எமது சங்க உறுப்பினரின் கேள்விக்கும் பதில் கூறவேண்டியவராவர். எனவே எமது வேதனையை அதிகரித்த பிரதமரே எமக்கு பதில் தரவேண்டியவராக கட்டாயப்படுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.

எமது காணாமற் ஆக்கப்பட்ட உறவுகளின் சிலர் உயிருடன் இல்லை என்று எப்படி கூறுவீர்கள்? அதற்கான ஆதாரங்களை எமக்கு வெளிப்படுத்த முடியுமா? எதற்கு காணாமற் ஆக்கப்பட்டவர்களுக்கான பதிவுகள் எதற்காக மேற்கொள்ளப்படுகின்றது? அவர்களின் குடும்பத்தினரின் கண் துடைப்பக்காகவா? சித்திரவதை முகாம்களில் இருந்த எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எப்படி நடந்தது? என்ன ஆனார்கள்? இதற்கான பதிலையும் பிரதமர் அவர்களே எமக்கு தரவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

காணாமற் ஆக்கப்பட்டவர்களில் சிலர் உயிருடன் இருப்பதாக இல்லை என்பதற்கு பதில் கூறவேண்டும் என்பதுடன் இத்தகவலை பிரதமரே தமிழர் பண்டிகையில் வெளிப்படையாக வெளியிட்டதை திருகோணமலை காணாமற் ஆக்கப்பட்ட குடும்பங்களின் உறவுகளின் சங்கம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றது. அவற்றோடு வடகிழக்கு 2000 மேற்பட்ட காணாமற் ஆக்கப்பட்டவர்களில் சிலர் உயிருடன் இல்லை என்றால் மீதியாக உள்ள உறவுகளின் நிலைமை என்ன? எங்கு உள்ளார்கள்? பிரதமருக்கு தெரிந்து இருக்கின்றதற்கான வழிமுறை உள்ளது என்பதனையும் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது. 

SHARE

Author: verified_user

0 Comments: