வாழ்வின் எழுச்சி வேலைத்திட்டத்திட்டத்தின் திவிநெகும பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் வைபவம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக செயலாளர் நிஹாரா . மாவட்ட திவிநெகும பணிப்பாளர் குணரட்ணம், உதவி பிரதேச செயலாளர் அல் அமீன். செயற்திட்ட அதிகாரி அன்னமலர் , திவிநெகும வங்கி முகாமையாளர் அஸீஸ், நிர்வாக உத்தியோகத்தர் ராஜ்குமார் அதிகாரிகளும் மற்றும் திவிநெகும பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment