எல்லோரும் நல்லவர்கள் என நினைத்து ஏமாறுபவர்களே! இந்த ஆண்டு முழுக்க சனி
வலுவாக இருப்பதால் குடும்பத்தில் நிலவிவந்த குழப்பங்கள் தீரும், கணவன்
மனைவி ஒன்று சேருவீர்கள். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும். வேலை
கிடைக்கும். பங்குச் சந்தை மூலம் பணம் வரும். வெளிவட்டாரத்தில் எல்லோரும்
ஏற்றுக்கொள்ளும்படி பேசிப் புகழடைவீர்கள். உங்கள் நட்பு வட்டத்தில்
பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மீதிப் பணத்தைத் தந்து சொத்துப்
பத்திரப் பதிவை முடிப்பீர்கள். 08.01.2016 முதல் வருடம் முடிய உங்கள்
ராசிக்கு 3-ல் ராகுவும், 9-ம் வீட்டில் கேதுவும் அமர்வதால் வீடு வாங்கும்
கனவு நனவாகும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். இந்தி,
தெலுங்கு பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். உங்கள் ராசிக்கு தைரிய
வீட்டில் இந்த ஆண்டு பிறப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம்
அடைவீர்கள்.
தேர்வில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் நீண்ட நாளாகக்
கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தந்து உற்சாகப்படுத்துவீர்கள். மகனுக்குத்
திருமணம் முடியும். வீடு கட்டுவதற்கான திட்டத்திற்கு அனுமதி கிடைக்கும்.
குரு பகவான் சாதகமாக இல்லாததால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும், விபத்து
நேரிடலாம். இரவுப் பயணங்களைத் தவிர்க்கவும். கணவன் மனைவிக்குள்
அனுசரித்துப் போவது நல்லது. வீண் விவாதங்கள் மற்றும் கோபம் வேண்டாம். மன
அழுத்தம், டென்ஷன் அதிகரிக்கும். தங்க நகைகளை இரவல் வாங்கவோ, தரவோ
வேண்டாம். நல்லவர்கள் போலப் பேசி உங்களைப் புகழ்பவர்களைத் தள்ளியே
வைத்திருக்கவும். ராசிநாதன் புதனும் சூரியனும் உங்களைப்
பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் அழகு,
ஆரோக்கியம் கூடும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.
உறவினர், நண்பர்களில் உண்மையானவர்களை இனங்காணுவீர்கள். உங்களிடம் கடன்
வாங்கி ஏமாற்றியவர்களெல்லாம் பணத்தைத் திருப்பித் தருவார்கள்.
வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடுமையாக உழைக்க வேண்டிவரும்.
அலுவலகங்களில் வேலைபுரிபவர்கள் கூடுதல் நேரத்தைச் செலவழித்து, பணிக்கப்பட்ட
வேலைகளை நிறைவேற்ற வேண்டிவரும். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் மார்ச், ஏப்ரல்,
செப்டம்பர் மாதங்களில் கையெழுத்தாகும். உத்யோகத்தில் ஒரு ஸ்திரமற்ற போக்கு
நிலவும். மேலதிகாரி உங்களுக்கு சாதகமாக இருக்கிறாரா, பாதகமாக இருக்கிறாரா
என்று உணர்ந்துகொள்ள முடியாமல் போகும். நிதானமாகக் கையாண்டால் வெற்றி
நிச்சயம். இழந்த சலுகைகளைப் போராடிப் பெறுவீர்கள். வருஷ ஆரம்பத்தில்
மலையாய் தோன்றிய விவகாரங்கள் வருட இறுதியில் பனியாய் மறையும்.
திட்டமிட்டுச் செயல்பட்டால் முன்னேறும் வருடமிது.
0 Comments:
Post a Comment