24 Jan 2016

கல்முனையில் நடைபெற்ற காலம் சென்ற ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 10 வது ஆண்டு நிகழ்வு

SHARE
திருகோணமலையில் கடந்த 2006.01.24 ஆம் திகதி சுட்டுக்கொலை கொலை செய்யப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர் எஸ்.சுகிர்ததாஜனின் 10 வது ஆண்டு நினைவு நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (24) கல்முனை வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான த.கலையரசன், ஞா.கிருஸ்ணபிள்ளை, மற்றும் தினகரன், பத்திரிகையின் ஆசிரியர் குணராசா, ஞாயிறு தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் பாரதி இராஜநாயகம், லேக்கவுஸ் ஆசிரிய பீடத்தின் பிரதானி சமன் வஹராய்ச்சி, ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு இயக்கத்தின் ப்பெடி கமஹே, யாழ் ஊடக மையத்தின் இணைப்பாளர் தயாபரன், உட்பட வடக்கு கிழக்கு மற்றும் தென்பகுதியிலிருந்தும் பல ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஊடகவியலாளர் அருள்.சஞ்ஞீத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுகிர்தராஜனின் ஊடக நண்பர்களான, திருகோணமலை ஊடகவியலாளர்களான, அச்சுதன், ஏ.எஸ்.எம்.சாலி, ஆகியோர் அவர்களது நினைவலைகளை நிகழ்த்தியதுடன், கலந்து கொண்டிருந்த சிரேஸ்ட ஊடகவியலாளர்களும் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
இதன்போது காலம் சென்ற ஊடகவிலாளர் எஸ்.சுகிர்தராஜனின் புதல்வர்களால் அவரது உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, ஏனையோர் ஈகைச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினர்.







































SHARE

Author: verified_user

0 Comments: