மட்டக்களப்பு எருவில் பாரதிபுரத்தினை பிறப்பிடமாகக் கொண்ட ராஜன் (வயது 30) என்பவர் தொழில் நிமிர்த்தம் சவுதிக்குச்சென்று தொழில் முடிந்து இருப்பிடம் நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வாகனம் விபத்துக்குள்ளாகி நேற்று மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து விட்டு சென்ற மாதம் இலங்கை வந்து தனது குடும்பத்துடன் இருந்து விட்டு மீண்டும் தொழில் நிமிர்த்தம் 22 நாட்களுக்கு முன்பு தான் சவுதிக்கு சென்றிருந்தார்.
அங்கு சென்று தான் தன்னுடன் தொழில் புரிபவர்களுடன் தொழில் முடிந்து வாகனத்தில் வந்து கொண்டிருக்கும்போது ஏற்பட்ட வாகன விபத்தினால் இவர் அந்த இடத்திலே உயிர் இழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

0 Comments:
Post a Comment